/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விழிப்புணர்வு நிகழ்ச்சி... போலீசாருக்கு 'மகிழ்ச்சி'
/
விழிப்புணர்வு நிகழ்ச்சி... போலீசாருக்கு 'மகிழ்ச்சி'
விழிப்புணர்வு நிகழ்ச்சி... போலீசாருக்கு 'மகிழ்ச்சி'
விழிப்புணர்வு நிகழ்ச்சி... போலீசாருக்கு 'மகிழ்ச்சி'
ADDED : மே 06, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க, 'மகிழ்ச்சி' திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் லோகநாதன் தலைமை வகித்தார்.
காவலர் நல்வாழ்வு திட்ட மாநில தொடர்பு அலுவலர் டாக்டர் ராமசுப்ரமணியன், உதவி அலுவலர் டாக்டர் கண்ணன், போக்குவரத்துத் துணை கமிஷனர் குமார் போலீசாரின் மன அழுத்தம் போக்க விழிப்புணர்வு அளித்தனர். இதில் 70க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார்,செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.