/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெல்வோம் பா.ஜ., வேட்பாளர் ராமஸ்ரீநிவாசன் உறுதி

ADDED : ஏப் 12, 2024 05:00 AM
மதுரை: ''திராவிட கட்சிகள் துணையின்றி மதுரையில் தனித்து நின்று ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தயாசத்தில் வெற்றி பெறுவோம்'' என பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாநில அரசு வழங்கும் திட்டங்களுக்கு அவர்களின் குடும்ப பெயரையே வைக்கின்றனர். ஆனால் மோடி வழங்கும் திட்டங்கள் அனைத்தும் 'பிரதமர்' பெயரில்தான் வழங்கப்படுகிறது. நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.22 தருகிறது.
ஆனால் மாநில அரசு ரூ.1 மட்டும் கொடுத்துவிட்டு, மீதியை இலவசம் என்று திட்டங்களை வகுத்து ஏமாற்றுகின்றனர். அப்படி இருக்கும்போது ஏன் ஒரு ரூபாய்க்கு 29 காசு மட்டும் மத்திய அரசு தருகிறது என குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 6:00 மணிக்கு மதுரையில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்கிறார். அவரை சந்திக்க 25 ஆயிரம் பேர் வருவர். தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம். 2019ம் ஆண்டு 'கோ பேக் மோடி' என்று முழக்கமிட்ட மக்கள் இன்று 'கோ பேக் டூ மோடி' (மோடியிடம் செல்லுங்கள்) என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் என்றார். மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உடனிருந்தார்.