ADDED : ஜூலை 29, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரி சார்பில் நிறுவனர் கருமுத்து தியாகராஜர் நினைவு தின ரத்ததான முகாம் நடந்தது.
முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை, மாணவர் நலன் டீன் சத்தியதாஸ், பேராசிரியர் சீனிவாசன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்றனர். உதவிப்பேராசிரியர்கள் சரவணஜோதி, முருகன், கோவிந்தராஜ், அன்பரசி ஒருங்கிணைத்தனர்.
