நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : தெற்குத்தெரு வைகை பொறியியல் கல்லுாரியில், கல்லுாரி மற்றும் மதுரை, மேலுார் அரசு மருத்துமவனை இணைந்து ரத்ததான முகாம் நடத்தின.
சி.எம்.ஒ., ஜெயந்தி, டாக்டர் செந்தில்குமரன், கல்லுாரி துணை முதல்வர் சிங்காரவேலன் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர் சத்யராணி, ஐ.சி.டி.சி., ஆலோசகர் சுரேந்திரன், கல்லுாரி நிர்வாகிகள் ராஜ்பரத்கிருஷ்ணன், பாலகுரு கலந்து கொண்டனர்.

