
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி,: உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை எழுமலை பகுதியில் காற்று, மழை காரணமாக உத்தப்புரம் - எழுமலை ரோட்டில் இருக்கும் வாவரகாய்ச்சி மரம் முறிந்து போக்குவரத்துக்கு தடையாக விழுந்து கிடந்தது.அவ்வழியாக வந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் காரிலிருந்து இறங்கி ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை உடன் வந்தவர்களுடன் அகற்றினார். இந்த காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகிறது.