/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச பதிவு செய்வதை ரத்து செய்யுங்க: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

ADDED : ஏப் 10, 2024 05:42 AM
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பில், கள்ளழகர் திருவிழாவில் சுவாமிக்கு தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தர வடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
காலங்காலமாக பக்தர்கள் விரதம் இருந்து பக்தி சிரத்தையுடன் மேற்கொள்ளும் வழிபாட்டை பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் மேல்முறையீடு செய்து ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.சிலர் விளையாட்டுத் தனமாக தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த பக்தர்களையும் தண்டிக்கக்கூடாது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பதிவு செய்வது சிரமம். ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கும் அறநிலையத்துறைக்கும் திருவிழா பணிச்சுமை இருக்கும் பட்சத்தில் புதிதாக ஒன்றை உருவாக்குவது நிர்வாகத்தையும் பக்தர்களையும் பாதிக்கும்.
இன்று பெயர் பதிவுக்குச் சென்ற பக்தர்களை கோயில் நிர்வாகம் தேர்தல் முடிந்த பின்னர் தான் பதிவு செய்ய முடியும் என திருப்பி அனுப்பியுள்ளனர். மூன்று நாள் இடைவெளியில் ஆயிரக்கனக்கான பக்தர்களை பதிவு செய்ய முடியாது.
எனவே நீதிமன்ற அனுமதியுடன் கோயில் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை இந்தாண்டு கடைபிடிக்கக் கூடாது என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.