/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆயிரம் ரூபாய்க்காக டூவீலரை எரித்தவர் மீது வழக்கு
/
ஆயிரம் ரூபாய்க்காக டூவீலரை எரித்தவர் மீது வழக்கு
ADDED : ஏப் 24, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : ஆஸ்டின்பட்டி அருகே வெண்கல மூர்த்தி நகரை சேர்ந்தவர் பரமன் 42, இவரது மனைவியிடம் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரூ. ஆயிரத்தை கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தை அவரது மனைவி உறவினரிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது அங்கிருந்த உறவினரின் மகன் அருண் 30, பரமனின் டூவீலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வண்டி எரிந்து சேதமடைந்தது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

