/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்க வழக்கு
/
சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்க வழக்கு
ADDED : பிப் 22, 2025 05:38 AM
மதுரை: மதுரை வைகை ராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை கான்சாபுரம் மெயின் ரோடு, செல்லுார்-கோரிப்பாளையம் ரோடு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்படும் நீர் வைகை ஆற்றிற்கு செல்லும். கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணியால் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துஉள்ளது. இதனால் கழிவுநீர் வைகையில் கலந்து மாசுபடுத்துகிறது.
சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க மாநகராட்சி, பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு கலெக்டர்,மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு பிப்.25க்கு ஒத்திவைத்தது.