/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிரிவலப் பாதையில் டாஸ்மாக்கை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கிரிவலப் பாதையில் டாஸ்மாக்கை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
கிரிவலப் பாதையில் டாஸ்மாக்கை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
கிரிவலப் பாதையில் டாஸ்மாக்கை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 26, 2024 01:18 AM

மதுரை : மதுரை தெற்குவெளி வீதி கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை அருகே அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அருகே சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட இதர வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் உள்ளன. மது அருந்துவோரால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. டாஸ்மாக்கை அகற்றக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வேறு இடத்திற்கு மாற்ற அல்லது அகற்றக்கோரி கலெக்டர், டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு: டாஸ்மாக் விதிகள்படி உரிய அதிகாரியிடம் மேல்முறையீடு செய்து நிவாரணம் தேடலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.