ADDED : ஆக 23, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் கல்லணையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
உதவி ஆணையர் (கலால்) சத்ய பாலகங்காதரன், தாசில்தார் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் சேது சீனிவாசன் வரவேற்றார்.
பொதுமக்களிடம் துறை அலுவலர்கள் மனுக்களை பெற்றனர்.
ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட, ஒன்றிய அவைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், நடராஜன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, மாவட்ட துணை அமைப்பாளர் விஜி உட்பட பலர் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டன.