ADDED : மார் 11, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைகள் (சி.ஐ.எஸ்.எப்.,)யின் 56வது உதயதினம் கொண்டாடப்பட்டது. விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தலைமை வகித்தார். சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மோப்ப நாய்களின் சாகசம் நடந்தது. தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்க முற்பட்டால் இவ்வீரர்கள் எவ்வாறு செயல்படுவர் என ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது.
விமான நிலைய இணை பொதுமேலாளர் ஜானகிராமன், முதன்மை பாதுகாப்பு அதிகாரி செல்லம், சிவில் உதவிப் பொதுமேலாளர் சுப்ரமணியன், சி.ஐ.எஸ்.எப்., உதவி கமாண்டண்ட் கமல்சிங், தமிழக அரசு துறை சார்பில் அவனியாபுரம் போலீஸ் உதவி கமிஷனர் சீதாராமன், தாசில்தார் கோபி பங்கேற்றனர்.