
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அலங்காநல்லுார் குறுவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளில் பங்கேற்றனர்.
19 வயது பிரிவில் ராகவி, ஈட்டி, வட்டு எறிதல், கோலுன்றி தாண்டுதலில் முதலிடம்பிடித்து தனித்த நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மாணவர் சஞ்சீவ் ஸ்ரீ ஈட்டி எறிதலில் 2ம் இடம், வட்டு எறிதலில் 3ம் இடம், 14 வயதில் கோகுல்நாத் வட்டு எறிதல் முதலிடம், குண்டு எறிதலில் 2ம் இடம் பிடித்தார்.
செஸ் போட்டி 11,14,17 வயது பிரிவில் ஹத்திஹா ஸ்ரீ முதலிடம்,பிளஸ்ஸி கிரேஸ், லோகேஸ்வரன், பிரின்ஸ், கவின் 2ம் இடம் பிடித்தனர்.
வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பெருமாள், சகாயம் மலர்விழி, சவுந்தரபாண்டியை தாளாளர் பென்சாம், தலைவர்சிவபாலன், பள்ளி முதல்வர் கலைவாணி, ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.