ADDED : ஜூலை 04, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் ஜூலை 16ல் நடக்கிறது.
மதுரை தமிழ்ச்சங்க காட்சிக் கூட அரங்கில் மாவட்ட அளவில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். போட்டி குறித்த விவரங்கள் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமும், கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மூலமும் தெரிவிக்கப்படும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.