நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு அருகே கொழிஞ்சிபட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
மே 20 முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.

