நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வளாகம் முன் புதிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றினர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.