/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிய வழிகாட்டுதல்படி பயிர் காப்பீடு திட்டம்
/
புதிய வழிகாட்டுதல்படி பயிர் காப்பீடு திட்டம்
ADDED : ஜூலை 16, 2024 04:11 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் காரீப் பருவத்தில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், விவசாயத்தில் நிலைபெற செய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி, அதிக பரப்பில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.நெல் பயிர்களை விதைக்க இயலா சூழ்நிலை காரணிகளுக்கு வி.ஏ.ஓ., விடம் விதைப்பு சான்று பெற்று விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் மற்றும் குறு வட்டாரங்களில் அறிவிக்கை செய்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள், குத்தகை விவசாயிகள் உட்பட இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள். வங்கியில் பயிர் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்யலாம்.
மேலும் விவசாயிகள் முன்மொழி படிவத்துடன், அடங்கல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம். ஆதார் நகல், நில உரிமை பட்டா ஆவணங்களுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.
காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31, ஏக்கருக்கு ரூ.712 மற்றும் மக்கா சோளம் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் செப்., 30 ஏக்கருக்கு ரூ.588 பிரிமியம்.
மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார்.

