/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆதார் 'அப்டேட்' செய்ய அலைபாய்ந்த கூட்டம்
/
ஆதார் 'அப்டேட்' செய்ய அலைபாய்ந்த கூட்டம்
ADDED : செப் 11, 2024 12:28 AM
மதுரை: பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை 'அப்டேட்' செய்ய வேண்டும் எனத்தகவல் பரவியதால் நேற்று ஏராளமானோர் மாவட்ட நீதிமன்றம் எதிரேயுள்ள ஆதார் சேவை மையத்தில் குவிந்தனர்.
இ சேவை மையத்தினர் கூறியதாவது: இதுதொடர்பாக மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆதார் பெற்ற ஒருவர் பத்தாண்டுகளாக அதை பயன்படுத்தாமல் இருந்தால் 'அப்டேட்' செய்ய வேண்டும் என ஏற்கனவே உள்ளது. ஆதார் அட்டையில் 'அப்டேட்' செய்ய வேண்டும் என்றால், அதுதொடர்பாக அவரவர் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதன்படி செயல்பட்டால் போதும். அதேசமயம் பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் திருத்தம் இருந்தால் அதனை பொதுமக்களே ஆன்லைனில் செய்து கொள்ளலாம். இல்லையெனில் ரூ.50 கட்டணத்தில் இ சேவை மையங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றனர்.