ADDED : ஜூலை 28, 2026 06:10 PM
சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே சேதமடைந்த கால்வாய் தடுப்புச்சுவரால் விபத்து அபாயம் உள்ளது.
அணைப்பட்டியில் இருந்து விக்கிரமங்கலம் விவசாய நிலங்களுக்காக அமைத்த திருமங்கலம் கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் கிளைக் கால்வாய் குளத்துப்பட்டி பிரிவு அருகே செல்கிறது. இதன் மீது விக்கிரமங்கலம்- செக்கானுாரணி ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் அமைக்கப்பட்டது.
இதன் இருபுறங்களிலும் விபத்து ஏற்படாமல் இருக்க அமைத்த தடுப்புச் சுவர், தற்போது பராமரிப்பின்றி காரை பெயர்ந்து கம்பிகள் தெரியுமளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளது. தொட்டாலே விழுந்துவிடும் நிலை உள்ளது. இப்பாலத்தில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இரவில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் விபத்து ஏற்பட்டு விபரீதம் விளையவும் வாய்ப்புள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
