தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்களுக்கு உதவித் தொகை

மாணவர்களுக்கு உதவித் தொகை

மாணவர்களுக்கு உதவித் தொகை


ADDED : ஜூலை 28, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் ஆசிரியர்கள் எஸ்.பி. கருப்பையா, சுப்புராஜம்மாள் நினைவு கல்வி, பொதுத் தொண்டு அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் துவக்கி வைத்தார். பேராசிரியர் ராஜலட்சுமி, ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். நிர்வாக அறங்காவலர் சத்தியமூர்த்தி வரவேற்றார். வட்டார அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பரிந்துரைத்த 29 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை எம்.எல்.ஏ.,கருப்பையா வழங்கினார்.

தி.மு.க.,முன்னாள் நகரச் செயலாளர் பிரகாஷ், முன்னாள் ஒன்றிய தலைவர் வனிதா, பொறுப்பாளர் ரங்கநாதன், த.வெ.க., ராஜேஷ் கண்ணா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி, எல்.ஐ.சி., முருகையா பங்கேற்றனர். அறங்காவலர்கள் முத்துலட்சுமி, வசந்த சரவணன், ரேவதிகுரு, ஆனந்த் கார்த்திகேயன், ஜெயரூபா செய்திருந்தனர். சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நவராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us