ADDED : பிப் 26, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை கைத்தறி நகரில் கைத்தறி நெசவு ரகங்களை விசைத்தறியில் நெய்வதை தடுக்க கோரி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய கைத்தறி சங்க நெசவாளர்கள் தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். நெசவாளர்கள் கூறுகையில், ''தமிழக அரசு  ஒதுக்கீடு செய்துள்ள மென்ரக பிரிவில் 12 ரக சேலைகளை ஆயிரக்கணக்கானோர் கைத்தறி நெசவில் தயாரிக்கின்றோம். இந்த ரகங்களில் ஐந்து ரகங்களை பலர் விசைத்தறிகளில் நெய்கின்றனர். இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.
கைத்தறி நெசவு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்றனர்.

