ADDED : மே 17, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் அறிவுறுத்தல்படி வலையங்குளம் அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் எலியார்பத்தி அப்போலோ செவிலியர் பயிற்சி கல்லுாரியில் தேசிய டெங்கு தினம் நடந்தது.
முதல்வர் ஹெலன் எம்.பார்டிட்டா தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன், இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராமு முன்னிலை வகித்தனர்.
மண்டல பூச்சியியல் வல்லுநர் ஜான் விக்டர் பேசினார். மாணவர்கள் டெங்கு சுகாதார உறுதிமொழி ஏற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் நன்றி கூறினார். சுகாதார ஆய்வாளர்கள் அழகுமலை, பாலகிருஷ்ணன், தினேஷ்குமார் ஏற்பாடுகள் செய்தனர்.

