ADDED : ஜூலை 27, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தங்குடி, கண்டுகுளம், புலியூர் கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 மாதங்களுக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கவில்லை.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லாததால் மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் – உசிலம்பட்டி ரோட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய தலைவர் நாகராஜ், செயலாளர் சின்னச்சாமி தலைமையில் அரைமணி மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
