தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 28க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 28க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 28க்குரியது


ADDED : ஜூலை 27, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ஆடி பிரம்மோற்ஸவம் – 8ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளல், காலை 7:15 மணி, குதிரை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:30 மணி, வள்ளி திருமண நாடகம், இரவு 7:00 மணி.

* ஆடி உற்ஸவம்: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, செவ்வாள் மாகாளி அம்மன் முளைப்பாரி கிராமிய கலைக்குழு மகேஷ் குழுவினரின் கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி.

* பவுர்ணமி பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, லட்சுமி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணி.

* ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சந்தன சாத்துபடி திருவிழா: சித்திவிநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 8:00 மணி. 

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* விளக்கு பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 5:30 மணி, பவுர்ணமி பூஜை, இரவு 7:45 மணி. 

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் – திருமாவளவன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் – மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* கடோபநிஷத் – விளக்கவுரை: நிகழ்த்துபவர் – ஸ்ரீகாந்த், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்புரை: கே.பி.எஸ்.கண்ணன், கருத்துரை: டாக்டர் ரோஸ்லின் சுல்தானா, காலை 10:00 மணி.

பொது

* ‘வனத்தின் அருமை வாழ்வின் பெருமை – பசுமை பேசும் பூமி’ கருத்தரங்கம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: ஊர்வனம் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை விஸ்வநாத், ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி.

* உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடுதல், சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தல்: பசுமலை போக்குவரத்து பணிமனை முதல் மூலக்கரை மயில் சிலை வரை, மதுரை, தொடங்கி வைப்பவர்: ஜெயன்ட்ஸ் குரூப் ஆப் மதுரை தலைவர் ராஜேந்திரபாபு, ஏற்பாடு: கிரீன் மதுரை போரம், காலை 10:15 மணி.

* மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டி, பங்கேற்பு: மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி.

* ஸித்த நரஹரி குருஜி ஆடிப்பூராட 104வது ஜெயந்தி விழா: ஸித்தாச்ரமம், மாரியம்மன் தெப்பக்குளம். மதுரை, முன்னிலை: தலைவர் கீதாபாரதி, சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் ராமகிருஷ்ண ஆசிரம தலைவர் சுவாமி நித்யசத்வானந்தா, எம்.எல்.ஏ., கோபிசன், காலை 8:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.  

மருத்துவம்

* போக்குவரத்து பணியாளர்கள், குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்: போக்குவரத்து பணிமனை, உசிலம்பட்டி, ஏற்பாடு: மதுரை ராக்ஸ் மற்றும் கே.ஆர்.எஸ்., மருத்துவமனைகள், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us