/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுமதியற்ற பாதாள சாக்கடை இணைப்பு மதுரையில் துண்டிப்பு
/
அனுமதியற்ற பாதாள சாக்கடை இணைப்பு மதுரையில் துண்டிப்பு
அனுமதியற்ற பாதாள சாக்கடை இணைப்பு மதுரையில் துண்டிப்பு
அனுமதியற்ற பாதாள சாக்கடை இணைப்பு மதுரையில் துண்டிப்பு
ADDED : மே 09, 2024 05:39 AM
மதுரை: மதுரை மாநகராட்சி வார்டு 62ல் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.
இம்மாநகராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவைகளுக்கு பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு மாநகராட்சி அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகிறது. அனுமதி பெறாமல் அமைக்கப்படும் இணைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநகராட்சி வார்டு 62, முத்துராமலிங்க தெருவில், ராம்குமார், கிருஷ்ணன் ஆகிய பெயர்களில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு மாநகராட்சி அனுமதி பெறாமல் பாதாள சாக்கடை இணைப்பு அமைக்கப்பட்டிருந்ததை உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன், இளநிலை பொறியாளர் கனி, ஆய்வில் கண்டறிந்து இணைப்பை துண்டித்தனர்.
கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு வளாகம், வணிக நிறுவனங்களில் அனுமதி பெறாமல் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது போலீசார், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.