ADDED : ஜூன் 06, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : பரவை வெற்றிவேல் சிலம்பப் பள்ளி சார்பில் மாவட்ட போட்டி நடந்தது. ஆசான் பாலமுருகன் தலைமை வகித்தார். ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு பிரிவுகளில் 6 முதல் 23 வயது வரை உள்ள 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் மேல அனுப்பானடி தாய்கலை சிலம்பம் மற்றும் கிராமிய கலைக்கூடத்தின் மாணவ, மாணவியர் ஆசான் திங்களரசன் தலைமையில் பங்கேற்று பரிசுகள் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சுழற்கோப்பை வழங்கப்பட்டது.