ADDED : செப் 01, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டியில் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் செயலாளர் பால்பாண்டி தலைமையில் நடந்தது.
எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெறுவதற்கான பணியை இப்போது இருந்தே துவங்க வேண்டும்'' என்றார். அவைத் தலைவர் திரவியம் உட்பட பலர் பங்கேற்றனர்.