/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., ஆட்சியில் எந்த பணியும் நடக்கலை: ராஜன்செல்லப்பா பேச்சு
/
தி.மு.க., ஆட்சியில் எந்த பணியும் நடக்கலை: ராஜன்செல்லப்பா பேச்சு
தி.மு.க., ஆட்சியில் எந்த பணியும் நடக்கலை: ராஜன்செல்லப்பா பேச்சு
தி.மு.க., ஆட்சியில் எந்த பணியும் நடக்கலை: ராஜன்செல்லப்பா பேச்சு
ADDED : மார் 27, 2024 07:20 AM
மேலுார்: மேலுார் தொகுதி அதி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிமுகம், நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
மதுரை வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது: பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.பி., தேர்தலில் போட்டியிடட்டும். தேர்தல் அதிகாரிகள் தி.மு.க., கட்டுப்பாட்டில் வருவதால் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டும் என்றால் நேரடியாக வைப்போம். அ.தி.மு.க.,வின் செல்வாக்கு வளர்ந்துள்ளதால் ஸ்டாலின் பொறாமையால் களங்கம் கற்பிக்க முயல்கிறார்.
காங்., ஆட்சியின் போது மதுரையில் ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் திட்டங்கள் துாத்துக்குடிக்கு செல்கிறது. மதுரையில் டைடல் பார்க் அறிவித்து 3 ஆண்டுகளாகியும் எந்த பணிகளும் துவங்கப்படவில்லை என்றார்.
எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.