/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., பிரமுகர் டூவீலருக்கு தீவைப்பு
/
தி.மு.க., பிரமுகர் டூவீலருக்கு தீவைப்பு
ADDED : ஏப் 21, 2024 04:22 AM
திருச்சி: திருச்சி சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்; தாராநல்லுார் பகுதியில் உள்ள கோயில் திருவிழா தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது. தி.மு.க., பிரமுகரான அவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டூவீலருக்கும் தீ வைத்தனர்.
சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சுரேஷ்குமார் புகார் கொடுத்தார்.கோட்டை போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

