/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வித்தை காட்ட வேண்டாமா: பழைய மெத்தை; பஞ்சு குப்பை குவித்து இடையூறு: இரண்டுக்கும் நடுவினில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு

ADDED : ஏப் 19, 2024 05:36 AM

ஜிம்னாஸ்டிக் விளையாட்டு கருவிகளை வாங்கி 20 ஆண்டுகளுக்கு மேலானதால் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் கிடக்கின்றன. பெண்களுக்கான பீம், டேபிள் வால்ட், அன் ஈவன் பார் கருவியில் மாணவிகளின் உயரத்திற்கேற்ப மாற்றியமைக்க முடியாததால் சீனியர்கள்மட்டுமே பயிற்சி பெறுகின்றனர்.
ஜூனியர்கள் தத்தி, தாவி உயரத்தை எட்டிப் பிடிக்க முடியாமல் பரிதவிக்கின்றனர். ஆண்களுக்கான டேபிள்வால்ட், ைஹபார், பேர்லல் பார், பொம்மல் ஹார்ஸ் கருவியிலும் உயரத்தை சரிசெய்ய முடியாத அளவு பழுதடைந்துள்ளது.
உயரம் தாண்டுதல், போல்ட் வால்ட் போட்டிகள் நடத்தும் போது அகலமான ஒன்றரை அடி உயரமுள்ள மெத்தை பயன்படுத்தப்படும். இந்த மெத்தைகளை ஆண்டுக்கணக்கில் ஜிம்னாஸ்டிக் அரங்கின் ஒரு பகுதியை அடைத்தவாறு வைத்துஉள்ளனர். புதிய மெத்தைகள் வாங்கி தற்போது பயன்படுத்தி வரும் நிலையில் இவற்றை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும்.
அதையும் செய்யாமல் குப்பை போல மெத்தை கிடப்பதால் மழைக்காலத்தில் பாம்புகள் அடைக்கலமாகும் இடமாக மாறியுள்ளது. அரங்கை ஒட்டியே புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் எளிதாக வந்து செல்கின்றன. பழைய மெத்தை ஒரு புறம் குவிந்திருக்க, ஏற்கனவே பயன்படுத்தி பழுதான மெத்தைகளின் பஞ்சு குவியலை எதிர்புறத்தில் குவித்துள்ளனர்.
சமீபத்தில் இரண்டு ட்ராம்போலின்கள் வாங்கப்பட்டுள்ளது. குதித்து தாவி ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறவும் போட்டி நடத்தவும் இந்த ட்ரோம்போலின்கள் பயன்படும்.
பழைய மெத்தையும், பஞ்சு குப்பையும் அரங்கின்கால்பகுதியை அடைத்துஉள்ளதால் ட்ராம்போலின்களை அங்கு வைக்க முடியவில்லை.
விளையாட்டுக்கு தேவையில்லாதவற்றை அகற்றி விட்டு புதிய கருவிகளை வாங்க வேண்டும் என பயிற்சிக்காக வரும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.