நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சேலம் பெரியார் பல்கலை கல்வியியல் துறை முதுகலை மாணவர்கள் தேசிய ஆசிரியர் கல்விக் குழு வழிகாட்டுதலின் பேரில் கல்விச் சுற்றுலாவாக மதுரை காந்தி மியூசியம் வந்தனர்.
மியூசிய செயலாளர் நந்தாராவ் வரவேற்றார். காந்தியின் வார்தா கல்வி திட்டம் தந்த சேவாகிராம் குடிலின் மாதிரியை பார்வையிட்டனர். காந்தி, வினோபாவின் கல்விச் சிந்தனை குறித்து கல்வி அலுவலர் நடராஜன் விளக்கினார். பேராசிரியர் வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.