/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூடுதல் ரயில்கள் இயக்க முயற்சி : எம்.பி., பேச்சு
/
கூடுதல் ரயில்கள் இயக்க முயற்சி : எம்.பி., பேச்சு
ADDED : ஆக 24, 2024 04:09 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் சீமானுாத்து, கீரிபட்டி, மேக்கிழார்பட்டி, வடுகபட்டி, கே.போத்தம்பட்டி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் அஜித்பாண்டி வரவேற்றார். தேனி எம்.பி. தங்கத்தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.. அய்யப்பன், ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் பாலகிருஷ்ணன், முன்னாள் யூனியன் சேர்மன் தங்கப்பாண்டியன், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். கேரளா நிலச்சரிவுக்கு எம்.பி., நிவாரண நிதி வழங்கினார்.
அவர் கூறுகையில், ''போடியில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளேன். மதுரையில் இருந்து பாசஞ்சர் ரயில் இயக்கப்படுவது போல், போடியில் இருந்தும் மதுரை மற்றும் பிற பகுதிகளுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்க குரல் கொடுப்பேன்'' என்றார்.
நல்லிவீரன்பட்டி மயானத்திற்கு செல்லும் வழியில் குறுக்கிடும் ரயில்வே பாதையில் தரைவழி பாலம் அமைத்து தரவேண்டும் என எம்.பி.,யிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். நேரில் பார்வையிட்டவர், 'நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்' என்றார்.

