நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப் பணித்துறை சார்பில் 'புரபஷனல் போட்டோகிராபி' சுயவேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சி ஜூனில் துவங்கும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், அதற்கு மேல் படித்தவர்கள் 30 நாட்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். பல்கலை சான்றிதழ் வழங்கப்படும்.
சந்திரசேகரன், இயக்குனர் (பொறுப்பு), வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப் பணித்துறை, காமராஜ் பல்கலை, அழகர்கோவில் ரோடு, மதுரை-625 002ல் விண்ணப்பம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 99943 90196ல் தொடர்பு கொள்ளலாம்.