ADDED : ஆக 03, 2026 07:11 PM
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் இளைஞர்களுக்கு கட்டண பயிற்சிகளை அறிவித்துள்ளது.
தங்கநகை மதிப்பீடு பயிற்சி ஆக.10 முதல் 14 வரை காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. கட்டணம் ரூ.8,500. சிறு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ஆக.12 முதல் 14 வரை நடக்கிறது. இதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம். காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.
தொழில் முனைவோருக்கான சோலார் எனர்ஜி பயிற்சி ஆக.15, 16ல் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. இதற்கான கட்டணம் ரூ.3,540. மேற்கண்ட பயிற்சிகளில் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்த இருபாலரும் பங்கேற்கலாம்.
ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார், கல்விச் சான்றிதழ் நகல், எஸ்சி., அல்லது எஸ்டி., வகுப்பினராக இருந்தால் அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும். முன்பதிவுக்கு 86956 46417, 86670 65048ல் தொடர்பு கொள்ளலாம்.
