தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஹெபடைட்டிஸ் பி, சி நோய் யாருக்கு வரும்

ஹெபடைட்டிஸ் பி, சி நோய் யாருக்கு வரும்

ஹெபடைட்டிஸ் பி, சி நோய் யாருக்கு வரும்


ADDED : ஆக 03, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, ---ஆக.4 –

ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி நோய்களுக்கு ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதன் மூலம் கல்லீரல் சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்க முடியும் என மதுரை அரசு மருத்துவமனை குடல் இரைப்பை சிகிச்சை பிரிவு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

துறைத்தலைவர் கண்ணன் வரவேற்றார். மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆர்.எம்.ஓ., முரளிதரன், மருத்துவப்பிரிவு தலைவர் பீர்முகமது முன்னிலை வகித்தனர்.

டீன் அருள் சுந்தரேஷ்குமார் பேசுகையில் ‘‘மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள், துணைமருத்துவப்படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழ் பெற்றிருப்பதை உறுதி செய்கிறோம். அறுவை சிகிச்சை, ரத்தப்பரிசோதனை, ஊசி மூலம் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் இந்நோய் பரவ வாய்ப்புள்ளதால் மருத்துவப்பணியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

உதவி பேராசிரியர் விஜய் சங்கர் பேசியதாவது:

மதுரை அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி., மையத்தில் சிகிச்சை பெறும் 4200 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது. 2025 ஏப்ரல் முதல் 2026 ஜூன் வரை, ஒரு சிலருக்கு 2 முறை வீதம் 6315 பேரை பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு பி நோயும் 24 பேருக்கு சி வகை கல்லீரல் பாதிப்பு நோய் கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் 0.3 சதவீதம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டயாலிசிஸ் செய்யும் நோயாளிகள், ஏதாவது காரணத்திற்காக ரத்தப்பரிசோதனை செய்யும் போது, பல் சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சையின் போதும், டாட்டூ குத்தும் போது, காது குத்தும் போது ஊசி மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டாலோ பி, சி வகை நோய் பாதிப்பு ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதன் மூலம் கல்லீரல் சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்றார்.

டாக்டர்கள் பிரவீண்குமார், வசந்தபிரியன், சித்ரா ஆகியோர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us