ADDED : ஜூலை 21, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மேலமாசிவீதி மதனகோபாலசுவாமி கோயிலில் வழக்கறிஞர்கள் உழவாரப்பணி குழு சார்பாக துாய்மைப்பணி நடந்தது.
18 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். கோயிலின் சிறப்புகள் குறித்து குழு பொறுப்பாளர் சுந்தரவடிவேல் விளக்கினார். மாதந்தோறும் 3வது ஞாயிறு இப்பணியை மேற்கொள்ள முடிவானது. ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் சிவக்குமார், முத்துக்குமரன், பானுப்ரியா, சேகரன் செய்திருந்தனர்.
