/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதிய விலை இல்லாததால் வெண்டை விவசாயிகள் கவலை
/
போதிய விலை இல்லாததால் வெண்டை விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 15, 2024 05:48 AM
பேரையூர், : பேரையூர் தாலுகாவில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நல்ல மகசூல் கிடைத்த போதிலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
கடந்த மாதம் வெண்டை கிலோ ரூ. 40க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.15க்கே கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் கூறியதாவது: நவீன ரக வெண்டையை சாகுபடி செய்து வருகிறோம். 45வது நாளில், காய்க்கத் துவங்கும்.
தினமும் அதிகாலை தொழிலாளர்கள் மூலம் காய் பறிப்போம். ஒரு நாளில் 50 சென்ட் நிலத்தில் 40 கிலோ வெண்டைக்காய் மகசூல் கிடைக்கிறது. ஆனால், போதுமான விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோ வெண்டைக் காய். 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கிறது. பறிப்பு கூலிக்குத் தான் விலை கிடைக்கிறது. வெண்டைச் செடியை பூச்சி தாக்காமல், மருந்து தெளித்து நன்கு பராமரித்தால், தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை காய்க்கும் என்றனர்.

