ADDED : ஆக 19, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : காந்திகிராம பல்கலை வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பள்ளியின் இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகள் மோனிகா, கீர்த்தனா, பிரேமலதா, அமலயோஷ்னி, இந்துமதி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் அம்மாபட்டி கிராமத்தில் 15 நாட்கள் முகாமிட்டு இதில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் கிராமத்தில் விளைவிக்கும் பயிர்கள், பயிர் வளர்ப்பு முறைகள், பூச்சி, நோய் பாதிப்புகள், தீர்வுகள் ஆகியவற்றை விவசாயிகளிடம் கேட்டு அறிகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம் குறித்து ஆலோசனைகளை மாணவியர் வழங்கி வருகின்றனர்.

