/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்வரத்து கால்வாய்களை கண்டுபிடித்து தாங்க... குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
/
நீர்வரத்து கால்வாய்களை கண்டுபிடித்து தாங்க... குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
நீர்வரத்து கால்வாய்களை கண்டுபிடித்து தாங்க... குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
நீர்வரத்து கால்வாய்களை கண்டுபிடித்து தாங்க... குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
ADDED : ஆக 14, 2024 12:53 AM

திருப்பரங்குன்றம் : 'ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்வரத்து கால்வாய்களை கண்டுபிடித்துத் தாருங்கள்' என திருப்பரங்குன்றம் தாலுகா குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறினர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது. துணைத் தாசில்தார் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். மாநகராட்சி உதவி கமிஷனர் ராதா, நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் சுந்தரமூர்த்தி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் காசிநாதன் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
விவசாயிகள் சுவாமிநாதன், மாரிச்சாமி, லட்சுமணன், மூர்த்தி, ராமசாமி, மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகள்:
தென்கால் கண்மாய் கரையில் தார் ரோடு அமைக்கும் போது தண்ணீர் வெளியேறும் மடைகளை சேதப்படுத்தி விட்டனர். இதனால் கடந்தாண்டைப் போல, இந்தாண்டும் செய்ய இயலாது. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
ஏற்குடி அச்சம்பத்துக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் கால்வாய் குப்பையால் நிரம்பி உள்ளது. நிலையூர் கால்வாயிலும் விளாச்சேரி முதல் ஹார்விப்பட்டி வரை கழிவுகளே கொட்டப்படுகிறது. கழிவு நீரும் விடப்படுகிறது. மழைக்காலம் துவங்கும் முன் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். தென்பழஞ்சி கண்மாய்க்குள் தனியார் குவாரிக்காக ரோடு அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
71, 72வது வார்டில் பாதாள கழிவுநீர் கால்வாய்க்குள் விடப்படுகிறது. 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு போலி பட்டாக்களால் பிளாட்களாகி வருகிறது. கால்வாய்களை கண்டுபிடித்து தாருங்கள். திருப்பரங்குன்றம் தாலுகாவில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள், குளறுபடி நடக்கிறது என்றனர்.