/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது
/
தமிழக பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது
தமிழக பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது
தமிழக பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது
ADDED : செப் 09, 2024 08:12 AM
திருப்பரங்குன்றம்: ''தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது:
அரசு பள்ளியில் சர்ச்சையை ஏற்படுத்திய மகாவிஷ்ணு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளார். 2021ல் அமைச்சர்கள் மகேஷ், மனோதங்கராஜுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். அதனடிப்படையில் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் மகேஷ் பதவி ஏற்றது முதல் பள்ளிக் கல்வித்துறையில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தமிழக அரசு மீது கோபத்தில் உள்ளனர். அரசுப் பள்ளியில் ஒரு தனிநபர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எப்படி சொல்ல முடியும். அப்படியானால் பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து தி.மு.க., அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி மதுரை வருகிறார்.
அ.தி.மு.க., நிகழ்ச்சிக்கு கொடிகட்ட கூட போலீசார் ஆயிரம் நிபந்தனை விதிக்கின்றனர். விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதிதர 21 கேள்விகள் கேட்கின்றனர். ஆனால் அமைச்சர் உதயநிதி வருவதற்கு விமான நிலையம் முதல் விவசாய கல்லுாரி வரை கொடிகள் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை கொண்டு வருவதாக கூறுகிறார். ஏற்கனவே சிங்கப்பூர், ஸ்பெயின், துபாய் சென்றபோது, நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் எந்த மாவட்டத்தில் என்ன தொழிற்சாலை தொடங்கினீர்கள்.
எவ்வளவு எவ்வளவு பேருக்கு வேலை தந்தீர்கள் என, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும் என்றார்.