தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச நோட்டு வழங்கல்

இலவச நோட்டு வழங்கல்

இலவச நோட்டு வழங்கல்


ADDED : ஜூன் 16, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நலமன்றம் சார்பில் 18வது ஆண்டு இலவச நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அண்ணாமலை, வள்ளியப்பன், கிருஷ்ணசாமி, குப்புசாமி, குலசேகரன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் வேட்டையார் வரவேற்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கினர்.

கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா, தென் மண்டல ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவசுந்தரம், ஹார்வி மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், கே.பி. விளையாட்டு குழு நிறுவனர் பாஸ்கர் பாண்டி, திருநகர் மக்கள் மன்ற நிர்வாகி பொன் மனோகரன் கலந்து கொண்டனர். மன்ற துணைத் தலைவர் காளிதாசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us