ADDED : ஆக 07, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் பயறு வகை பயிர்களில் தொகுப்பு முதல் நிலை செயல் விளக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்பட்டன.
ஆடிப்பட்டத்தில் பயிரிடுவதற்கான உளுந்து வம்பன் 11 விதைகள், விதை நேர்த்தி செய்வதற்கான வேளாண் பல்கலையின் விதை அமிர்தம், பயறு ஒண்டர் பயிர் ஊக்கி என 20 எக்டேர் பரப்பளவில் பயிரிடுவதற்காக வழங்கப்பட்டது. இதற்கான விழாவில் விதை உற்பத்தியின் நோக்கம் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், விதைநேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இணைப்பேராசிரியர் ஆனந்த் விளக்கினர்.
