ADDED : ஆக 07, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலக மதுரை கிளை சார்பில் பேக்கரி பொருட்கள் உற்பத்தி குறித்த 30 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆக. 18 முதல் செப். 25 வரை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கும் பயிற்சியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதலில் பதிவு செய்யும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு முன்னுரிமை என உதவி இயக்குநர் உமா சந்திரிகா தெரிவித்துள்ளார். அலைபேசி: 98420 35441.
