ADDED : ஆக 30, 2024 06:09 AM
மதுரை : இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூலிகை, காஸ்டிக் சோடா, கிளிசரின் சார்ந்த குளியல் சோப்பு வகைகள், மூலிகை குளியல் பொடி, சலவை சோப்புத்துாள், திரவம், பாத்திரம் துலக்கும் சோப்பு, பினாயில், சோப் ஆயில், ஹேண்ட்வாஷ், பாடிவாஷ், கார் வாஷ், ஷாம்பூ, முக கிரீம்கள், லிப் பாம், இயற்கை நறுமண சாதனங்கள் தயாரிக்கும் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை 26 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசம். ஆதார் அட்டை நகல், கல்விச்சான்றிதழ் டி.சி. நகல், போட்டோவுடன் அணுக வேண்டும். பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்க மானியத்துடன் வங்கி கடனுக்கு வழிகாட்டப்படும்.
பயிற்சி நடக்கும் இடம்: பெட்கிராட், அருணாச்சலம் தெரு, வடக்குவாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை. விரும்புவோர் 90950 54177ல் முன்பதிவு செய்ய வேண்டும்.