/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் உதயமானது 'ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி'
/
மதுரையில் உதயமானது 'ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி'
ADDED : மார் 04, 2025 02:55 AM
மதுரை : மதுரை கப்பலுாரில் 'ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி' என்னும் டவுன்ஷிப் திட்டத்துடன் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் கால் பதித்துள்ளது.
நடுத்தர மக்களின் வீட்டு மனைகள், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கனவை நனவாக்கும் விதமாக இந்நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மதுரையில் அறிமுகப்படுத்தவுள்ள ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி, கப்பலுார் விமான நிலைய சுற்றுச்சாலையில் அமைந்துள்ள முதன்மையான குடியிருப்பு திட்டமாகும். 30 ஏக்கரில் 500 வீட்டு மனைகளை கொண்டுள்ளது. வீட்டு மனைகளை வாங்குவோர் உடனடியாக வீடுகட்டி குடியேறும் வகையில் தெரு விளக்குகளுடன் கூடிய தரமான சாலைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளை கொண்டுள்ளது.
மனையில் இருந்து 2 நிமிட துாரத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரி உள்ளது.
ஒரு நிமிட துாரத்தில் கப்பலுார், சிட்கோ பஸ் ஸ்டாப், 10 நிமிட துாரத்தில் விமான நிலையம் உள்ளது. 5 நிமிட துாரத்தில் ஜோஹோ நிறுவனம் உள்ளது.
மிக விரையில் டைடல் பூங்கா, 2027-ம் ஆண்டு டிசம்பருக்குள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் துவங்க உள்ளன.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கப்பலுாரை ஒரு பிரதான இடமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு சென்ட் நிலம் ரூ.5.5 லட்சத்திற்கு வாங்கலாம்
நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், ''எங்களிடம் வீட்டு மனைகள் வாங்குபவர்களுக்கு எந்த சட்டச் சிக்கல்களும், வில்லங்கமும் இல்லாத வகையில் முறையான ஆவணங்கள் மூலம் மனைகளை விற்று வருகிறோம்.
12 ஆண்டுகளில், ஜி ஸ்கொயர் 14 நகரங்களில், 15,000க்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
4000 ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைத்து, ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது'' என்றார்.