ADDED : செப் 13, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி அன்று நகரின் முக்கிய இடங்களில் 3அடி முதல் 10அடி உயரமுள்ள 36 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அச்சிலைகள் நேற்று மாலை 16 கால் மண்டபம் கொண்டுவரப்பட்டது. பூஜை, தீபாராதனை முடிந்து ரத வீதிகள், பெரிய ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செவ்வந்திக் குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன.
முன்னதாக நகர் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். கோவை கோட்டச் செயலாளர் கிருஷ்ணன் பேசினார். நிர்வாகிகள் சரவணன், வரதன், பிரசாந்த், ரமேஷ், சூரியபிரபு, சேவுகன், அரசுபாண்டி, கலாநிதி மாறன், அழகர்சாமி கலந்து கொண்டனர்
போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

