/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'குட்' குவாரிகளா: மதுரையில் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு : ஆவியூரில் நடந்த வெடி விபத்தின் எதிரொலி

ADDED : மே 03, 2024 05:53 AM

மதுரை: மதுரை அருகே ஆவியூர் வெடிமருந்து கோடவுனில் நேற்றுமுன்தினம் நடந்த பயங்கர வெடி விபத்தில் 3 பேர் பலியாயினர். இதன் காரணமாக மதுரை மாவட்ட கல்குவாரிகளை ஆய்வு செய்ய கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமுள்ளது. நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. எனவே பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிப்பது தொடர்பாக கலெக்டர் சங்கீதா ஆய்வு நடத்தினார். குடிநீர் வாரியம், நகராட்சி, மாநகராட்சி உட்பட உள்ளாட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, போலீசார் உட்பட பலதுறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஊரக பகுதிகளில் தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பஸ்ஸ்டாண்ட், அரசு அலுவலகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிசெய்ய வேண்டும். பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு வெப்ப அலையின் தாக்கம், பாதிப்பு குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடிநீர் இருப்பு குறித்து முறையாக கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் வெடிமருந்து கோடவுனில் நடந்த விபத்து குறித்தும் ஆலோசித்தார். இதன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளிலும் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும். குவாரிகளை உடனே ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய், கனிமவளம், தீயணைப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.