ADDED : மார் 12, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்; மாநகராட்சி மேற்கு மண்டலம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
தலைவர் சுவிதா தலைமை வகித்தார். மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அய்யல்ராஜ் அளித்த மனுவில், வீட்டு வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் 16 நாள் மண்டபம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பூங்காவில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். பருவமழை துவங்கும் முன் பாதாள சாக்கடை பணிகளை துவக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.