/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிக வரி, கூடுதல் அபராதம், வட்டியே ஜி.எஸ்.டி. வசூல் சாதனைக்கு காரணம்
/
அதிக வரி, கூடுதல் அபராதம், வட்டியே ஜி.எஸ்.டி. வசூல் சாதனைக்கு காரணம்
அதிக வரி, கூடுதல் அபராதம், வட்டியே ஜி.எஸ்.டி. வசூல் சாதனைக்கு காரணம்
அதிக வரி, கூடுதல் அபராதம், வட்டியே ஜி.எஸ்.டி. வசூல் சாதனைக்கு காரணம்
ADDED : மே 03, 2024 05:50 AM
மதுரை: தொழில் நிறுவனங்களுக்கான அதிக வரி, கூடுதல் அபராதம், வட்டி போன்ற காரணங்கள் தான் ஜி.எஸ்.டி., வரிவசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டிய சாதனையாக உள்ளது. மத்தியில் அமையும் புதிய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ரத்தினவேலு கூறியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் நுகர்வு அதிகரிப்பு, தொழில் வணிகத்துறை முறையாக வரி செலுத்துவதும் ஜி.எஸ்.டி. வரிவசூல் சாதனைக்கு ஒரு காரணம்.
அதிகளவில் உயர்ந்த வரி வீதங்களும், புரிந்து கொள்ள முடியாத சட்டவிதிகளால் தொழில் வணிகத்துறை செலுத்திய கூடுதல் அபராதம், வட்டி ஆகியவை கூடுதல் காரணம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வேறு வழியின்றி சிரமப்பட்டு இவ்வளவு பெரிய வரித் தொகையைச் செலுத்துகின்றனர்.
ஜி.எஸ்.டி., வரிவீதத்தை மறுபரிசீலனை செய்து குறைக்கவும் வரிச்சட்டத்தை எளிமையாக்க வேண்டியதன் அவசியத்தையும் சாதனை வரி வசூல் தெளிவுபடுத்துகிறது.
விவசாயிகள், வணிகர்கள் யார் கையில் வேளாண் உணவு உற்பத்திப் பொருட்கள் இருந்தாலும் நுகர்வோரைச் சென்றடையும் வரை முழு வரிவிலக்கு அளிக்கவேண்டும்.
பதப்படுத்தப்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட அனைத்து வேளாண் உணவுப் பொருட்களுக்கும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத வரி விதிக்க வேண்டும். பிறஅனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கு 10 சதவீத வரி, ஆடம்பர பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கவேண்டும். அனாவசிய லாகிரி பொருட்களின் நுகர்வைத் தடுக்கும் வகையில் கூடுதல் வரி விதிக்கலாம்.
ஜி.எஸ்.டி., வரிச் சட்டத்தின் முக்கியக் கருவான உள்ளீட்டு வரி வரவுச் சலுகை மறுக்கவோ, குறைக்கவோ கூடாது. ஜூன் மாதம் அமைய உள்ள மத்திய அரசு வரிச்சட்டத்தை எளிமைப் படுத்தி, வரியை குறைக்கவேண்டும் என்றார்.