ADDED : ஆக 23, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: மதுரை வட்டார கிராமங்களுக்கு பாலமேடு வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தேங்கும் மழை நீர் வடிந்தோட வழியின்றி நாட்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதில் வாகனங்கள் செல்ல செல்ல பள்ளம் பெரிதாகி வருகிறது.
தேங்கிய நீர் துர்நாற்றம் வீசுவதால் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர். வாடிப்பட்டி ரோடு, பஜார், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த பஸ் ஸ்டாண்ட் வழி செல்லும் வடிகால் வழியாகவே செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாததால் நோய் தொற்று அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

