ADDED : மார் 07, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : எழுமலை, இ.பெருமாள்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் புனரமைப்பு பணியில் அம்மன் சிலை வைக்க ஏற்பாடு செய்தனர். சிலை பிரதிஷ்டை செய்வதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கருத்து மோதலால், கோயில் திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண கோரி ஹிந்து முன்னணியின் மதுரை மாவட்ட துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள் எழுமலை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முக வடிவேலிடம் மனு அளித்தனர்.